சென்னை பல்கலைக்கழக எம்.பி.ஏ., எம்.சி.ஏ. இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவுக்கு பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இனி சென்னை பல்கலைக்கழக எம்.பி.ஏ., எம்.சி.ஏ. இடங்கள் அனைத்தும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை மூலமே நிரப்பப்பட உள்ளன.
இதுவரை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மதிப்பெண் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகமே நேரடியாக இந்த இடங்களை நிரப்பி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (ரெகுலர்) 45 இடங்களும், சுய கட்டண நிர்ணய எம்.பி.ஏ. படிப்பு 50 இடங்களும், எம்.சி.ஏ. படிப்பில் 30 இடங்களும் உள்ளன.