நான் அடுத்தவறை வாழ்த்துவதற்கு மட்டுமே எனது தமிழை பயன்படுத்துவேன்.வசைபாடுவது என்றால் ஆங்கிலம்தான்!!!! பாரதி

வங்காள தேசத்தில் ஒரு கூட்டம். மகாத்மா ஆங்கிலேயருக்கு எதிராக உரையாற்றிவிட்டு திரும்புகிறார். மறுநாள் உலகத்தில்
பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியத்தலைவர்கள் அனைவருமே காந்திக்கு கண்டனக் கடிதங்கள் எழுதினர். நடந்தது இதுதான்.முந்தைய நாள் கூட்டத்தில் காந்தி வெள்ளையனை விரட்ட பேசிய கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிவிட்டார்.அதனாலே இந்தக் கண்டனக் கடிதங்கள்.
பாரதியும் கடிதம் எழுதினார் "Mr.Gandhi. என்று ஆரம்பித்து ஆங்கிலத்தில்...காந்தி அவர்களே நீங்கள் வெள்ளையனுக்கு எதிராக பேசுகையில் ஒன்று உங்கள் மொழியான குஐராத்தி மொழியில் பேசியிருக்கலாம்.இல்லையெனில் பேசிய இடத்தின் மொழியான வங்காள மொழியில் பேசியிருக்கலாம்.அல்லது இந்திய மொழிகளில் ஏதேனும் மொழியில் கூட பேசியிருக்கலாம் .அதைவிட்டு விட்டு ஆங்கிலேயனை வெளியேறு என்று அவன் மொழியிலே பேசியது தவறு.உங்கள் நாக்கிலிருந்தே வெளியேற்ற முடியாத ஆங்கிலத்தை நாட்டை விட்டு எப்படி வெளியேற்ற முடியும் " என்று கோபமாக எழுதியிருந்தான் பாரதி.
காந்தி தனது தவறை ஒப்புக்கொண்டு அனைவருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதினார். பாரதிக்கும் கடிதம் எழுதினார்" மன்னித்து விடுங்கள் பாரதி.நீங்கள் சொல்வது தவறுதான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அதே தவறை நீயும் செய்திருக்கிறீர்கள். உங்கள் கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள்.இது தவறு இல்லையா ?" என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார் காந்தி.

அடுத்த கடிதம் பாரதியிடமிருந்து சென்றது தமிழில்" மன்னித்துக் கொள்ளுங்கள் காந்தி. வாழ்க நீ எம்மான்.தவறை ஒப்புக் கொண்டதிற்கு நன்றி.சென்ற கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதியதற்கு காரணம் கேட்டிருந்தீர்கள்.அதில் தவறேதும் இல்லை.நான் அடுத்தவறை வாழ்த்துவதற்கு மட்டுமே எனது தமிழை பயன்படுத்துவேன்.வசைபாடுவது என்றால் ஆங்கிலம்தான்.எனவே சென்ற கடிதம் ஆங்கிலத்திலும் உம்மை வாழ்த்தி எழுதிய இந்த கடிதத்தை எனது பெருமைமிகு தமிழிலும் எழுதியுள்ளேன்."என்றான் பெருமையாக...
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...