உற்சாக குளியல் போடும் சிறுவர்கள்

கோடை விடுமுறை விட்டதால் வெப்பத்தை தணிக்க தண்ணீர் உள்ள கிணறுகளை தேடி சென்று சிறுவர்கள் உற்சாக குளியல்
போட்டு மகிழ்கின்றனர்.
கோடை வெப்பம் நாளுக்கு நாள் சுட்டெரித்து வருவதால் வெட்டவெளி மைதானத்தில் விளையாட முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர். சில இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதிய நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதை காணமுடிகிறது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால் ஏரி, குளங்கள் விளையாட வசதியாக உள்ளது.
கிராமங்களில் உள்ள மாணவர்கள் கோடையில் கிணறுகளில் சென்று குளித்து விளையாடுவதும், நீச்சல் பழகுவதும் வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி வறட்சி நிலவுவதால் பல கிணறுகளில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள ஒரு கிணற்றில் நீர்மட்டம் குறையாமல் உள்ளதால் இப்பகுதி சிறுவர்களின் மதிய நேர விளையாட்டு மையமாக இக்கிணறு மாறியுள்ளது. வெயிலுக்கு சுகமாக குளிக்க அதிகளவில் சிறுவர்கள் வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...