வாக்குப் பதிவு நாளன்று விடுமுறை அளிக்காமல்
செயல்பட்ட 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஐ.டி. நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 24-அன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் தனியார் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சில ஐ.டி. நிறுவனங்கள் அன்றைய தினத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இயங்கின. இது குறித்து தகவல் கிடைத்த உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அந்த நிறுவனங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது அந்த வழக்குகள் கடுமையான பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஐ.டி.நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை போலீஸார் கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.