சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கும் நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கோடைக் கால விடுமுறையில் (மே மாதம் 1- முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை) வழக்கு விசாரணைக்கான நீதிபதி அமர்வுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதில்,மே 1 முதல் 11-ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் தலைமையில் அமர்வு வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெறும். அதன் பிறகு இருவரும் தனியாக வழக்குகளை விசாரணை செய்வர். நீதிபதி சி.எஸ்.கர்ணன் குற்றவியல் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வார். மே 12 முதல் 18- ஆம் தேதி வரை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்,டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி கே.பி.கே.வாசுகி குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வர்.மே 19 முதல் 25-ஆம் தேதி வரை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,கே.ரவிச்சந்திர பாபு ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி ஆர்.மகாதேவன் குற்றவியல் வழக்குகளையும் விசாரணை செய்வார்கள்.மே 26 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நீதிபதிகள் அருணா ஜெகதீசன்,எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அமர்வு வழக்குகளையும்,நீதிபதி ஜி.சொக்கலிங்கம் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்வார்கள். மேலும்,திங்கள்கிழமை,செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கலும்,புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கு விசாரணைகளும் நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...