அண்ணா பல்கலை: எம்.எஸ்சி., எம்.பில். சேர்க்கை அறிவிப்பு

கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. வளாகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி., எம்.பில்.
படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் www.annauniv.edu இணைய தளம் மூலம் பதிவு செய்து, விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணம் ரூ. 700-க்கான வரைவோலையை இணைத்து "இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 350 செலுத்தினால் போதுமானது.
முக்கியதேதிகள்:
இணையதளம் மூலம் பதிவு ஆரம்பம்: 28.4.2014 பதிவு செய்ய கடைசித்தேதி: 26.5.2014 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி:30.5.2014

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...