அரசு கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக
இயங்கி வருகிறது. பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணிப்பொறியியல், பி.காம்., ஆகிய நான்கு பாடப்பிரிவுகளில் மொத்தம் 763 பேர் படித்து வருகின்றனர்.
விடுதி மாணவர்கள் தங்கி படிப்பதற்காக பிற்பட்டோர் நலத்துறை சார்பில் க.மாமனந்தல் கிராமத்தில், கட்டுமான பணி முழுமை பெறாத கட்டடத்தின் முதல் தளத்தில் கடந்த இரண்டு ஆண்டாக விடுதி இயங்கி வருகிறது. கட்டடத்தில் தரை, ஜன்னல்கள், கதவுகள் பணிகள் முழுமை பெறாததால், இன்னமும் வாடகை நிர்ணயிக்கபடவில்லை. இதனால், வாடகை வழங்கப்படாததால் கட்டடத்தின் உரிமையாளர், கீழ் பகுதியை குடியேறி, மாணவர்களிடம் விடுதியை காலி செய்து கொடுங்கள் என கூறி வருகிறார்.
விடுதியில் 100 மாணவர்கள் உள்ளதாக பதிவேடுகளில் இருந்தாலும், அங்கு 20 மாணவர்கள் மட்டுமே தங்கியுள்ளனர். இந்த விடுதிக்கு வார்டன்களாக சோமண்டார்குடி மற்றும் உளுந்தூர்பேட்டை பள்ளி விடுதிகளில் பணியாற்றும் பரமசிவம், முருகேசன் ஆகியோர் இங்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாதத்திற்கு ஓரிரு முறை மட்டுமே இங்கு வருவதால், மாணவர்களை கவனிக்க ஆள் இல்லை.
துப்புரவு பணிக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நபரும் பணிக்கு வருவதில்லை. இதனால், மாணவர்களே விடுதி மற்றும் கழிவறையை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டியுள்ளது. அரசு விதிப்படி விடுதி மாணவர்களுக்கு காலை டிபன், மதியம் சாம்பார், மோர், கூட்டு அல்லது பொறியலுடன் சாப்பாடு, இரவு சாம்பார், ரசம், பொறியல் அல்லது முட்டையுடன் சாப்பாடு வழங்க வேண்டும். ஆனால், இங்கு காலையில் எலுமிச்சை, புளி, தயிர் என ஏதாவது ஒரு கலவை சாதம் மற்றும் பாக்கெட் ஊறுகாய் வழங்கப்படுகிறது.
மதியம் சாம்பார், மோர், முட்டையுடன் சாப்பாடு, இரவு உணவாக மீண்டும் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் காலையில் டிபனும், புதன் கிழமையன்று மதியம் கோழிக்கறி குழம்பு தரப்படுகிறது.
காலையில் வகுப்பு 9:00 மணிக்கும், பிற்பகலில் 1:15 மணிக்கும் வகுப்பும் துவங்கும் நிலையில் விடுதியில் காலை சாப்பாடு 9:30 மணிக்கும், மதிய உணவு 1:30 மணிக்கு வழங்குவதால், மாணவர்கள் தினசரி முதல் வகுப்பு "கட்" ஆகிறது.
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத கட்டடத்தில் தரைப்பகுதி பூசப்படாமல் உள்ளதோடு, ஜன்னல் மற்றும் கதவுகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள் தங்கியுள்ளனர். மேலும், இரவில் கொசுத் தொலையால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கல்லூரியில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இனியேனும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விடுதியில் வரும் கல்வி ஆண்டிலாவது அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர முன் வரவேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...