மக்களவைத் தேர்தல் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள்
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழக காவல்துறையின்
தேர்தல் பிரிவு டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இம் மாதம் 24-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இறுதிக் கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மாலையுடன் நிறைவடைகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையில் உள்ள சுமார் ரூ.1.10 லட்சம் போலீஸார், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவப் படையினர் 13 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் துணை ராணுவப்படையினர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பிரிவு டிஜிபி அனுப் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்களவைத் தேர்தலுக்காக கண்காணிப்பு பணியில் மட்டும் மாநிலம் முழுவதும் 1,400 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீஸார், துணை ராணுவப்படையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலின்போது முறைகேடு மற்றும் வன்முறை குறித் தகவல்களை பொதுமக்கள் காவல் நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 044-28441707, 28441507, 28441807 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.