வாக்களிப்பதற்கான 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) அறிவிக்க உள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக தற்போது 68 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன.
மேலும் 12 ஆவணங்கள்: வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் ஆகியவற்றை மட்டும் முன்பு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தற்போது மேலும் 12 ஆவணங்களை அனுமதித்துள்ளது. அது குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும்.
கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்: வாக்குப்பதிவு தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135 (பி) பிரிவு சொல்கிறது.
என்றாலும், அத்தியாவசியப் பணிகள் என்றும் உள்ளன. ஓட்டுப் பதிவு செய்துவிட்டு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் அன்று விடுமுறை கிடையாது என்றும் சில நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
வாக்குப்பதிவு தினத்தன்று (ஏப்.24) தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாதிருந்தால், தொலைபேசி (எண் 1950) மூலம் புகார் செய்யலாம்.
உடனடியாக அங்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
கைதிகளுக்கு தபால் ஓட்டு: சிறையில் உள்ள கைதிகளில் அனைவரும் வாக்களிக்க முடியாது.
குண்டர் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மட்டும் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தலாம் என்றார் பிரவீண்குமா