நடுநிலைப்பள்ளிகள் தரம் உயருமா?

அன்னூர் வட்டாரத்தில் நடுநிலைப்பள்ளிகள் தரமுயர்த்தப்படாமல் உள்ளன. தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப
பெற்றோர் விரும்பாததால் மாணவியர் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொள்கின்றனர்.
அன்னூர் வட்டாரத்தில் 75 துவக்கப்பள்ளிகளும், 16 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில் 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பிள்ளையப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
உயர்நிலைப் பள்ளி துவக்க தேவையான நிலத்தை தனியார் இலவசமாக வழங்கியுள்ளனர். இதற்கான வைப்புத்தொகையும் அரசிடம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்பள்ளி தரமுயர்த்தப்படவில்லை. இதனால், தொட்டியனூர், பிள்ளையப்பம்பாளையம், வேலாயுதம்பாளையம், தெலுங்குபாளையம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடித்தபின் 4 கி.மீ., தொலைவில் உள்ள கெம்ப நாயக்கன்பாளையம் அல்லது 5 கி.மீ., தொலைவில் உள்ள சொக்கம்பாளையம் செல்ல வேண்டி உள்ளது.
சில மாணவிகளின் பெற்றோர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப விரும்பாததால், மாணவியர் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். இதேபோல், கஞ்சப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர் 5 கி.மீ., தொலைவில் உள்ள அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. செல்லப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உயர்நிலை வகுப்புக்கு ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இது குறித்து அன்னூர் வட்டார மக்கள் அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. "இந்த கல்வியாண்டிலாவது அன்நூர் வட்டாரத்தில் தகுதியுள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரமுயர்த்த வேண்டும்" என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...