ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் ஒரு மணி நேரம், அடிமையாக இருக்க
வேண்டுமென்றால், எத்தனை பேர் அதற்கு முன் வருவார்கள்?
மானமுள்ள மனிதன் எவனும் அதற்கு ஒப்புக் கொள்ளப் போவதில்லை; ஆனால், வெறும் ஐநூறு ரூபாய்க்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருவர்க்கு அடிமையாக இருப்பதற்கு பல லட்சம் மக்கள் தயாராகியிருக்கிறார்கள்; தேர்தலில் வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்குவதைத்தான் சொல்கிறோம்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த லோக்சபா தேர்தலில்தான் கொங்கு மண்டலத்தில், கட்டுப்பாடு இல்லாமல் பணப்பட்டுவாடா நடந்துள்ளது; கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் தொகுதிகளில், தேர்தல் கமிஷன் இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வாரி வழங்கப்பட்டுள்ளது; அதிசய முரண்பாடாக, அரசு அதிகாரிகளும் அ.தி.மு.க.,வுக்கு துணை நிற்கின்றனர்.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், முக்கிய பொறுப்பிலுள்ள இரு 'மாவட்ட' அதிகாரிகளும் கிட்டத்தட்ட ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று மக்களே வெளிப்படையாக பேசிக்கொள்ளும் வகையில்தான் நடந்து கொண்டிருக்கின்றனர்; இவ்விரு தொகுதிகளிலும், வெற்றி பெறாவிட்டால் இருவருக்கும் 'கல்தா' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
வேட்புமனு தள்ளுபடி, பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக நடந்த அத்துமீறல்கள், செலவு கணக்கு என பல்வேறு விவகாரங்களிலும், ஆளும்கட்சிக்கு மறைமுக ஆதரவாக செயல்பட்டு வந்த இந்த அதிகாரிகள், இறுதியாக நடந்த பணப்பட்டுவாடா புகார்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் மூலமாக, அப்பட்டமான அ.தி.மு.க., ஆட்களாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் ஆதரவோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் 'தில்லுமுல்லு' செய்யும் முயற்சி நடப்பதாகவும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது; இதனை மறுக்கும் அரசுத்துறை அதிகாரிகள், 'அதற்கு வாய்ப்பில்லை; ஆனால், பணப்பட்டுவாடா போன்ற புகாரை கண்டு கொள்ளக்கூடாது' என்ற உத்தரவு, தங்களுக்கு வந்திருப்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
அரசு அலுவலர்கள் சார்ந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'சட்டமன்றத் தேர்தலாக இருந்தால், அரசு அதிகாரிகள் ஏதாவது ஒரு முடிவெடுத்து, திட்டவட்டமாக செயல்பட வாய்ப்புண்டு; ஆனால், இன்னும் இரு ஆண்டுகள் இதே அரசிடம் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஆளும்கட்சிக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை; அப்படிச் செய்தால் பழி வாங்கப்படும் வாய்ப்புள்ளது,' என்றார்.
கொங்கு மண்டலத்தில், ஆளும்கட்சிக்கு சாதகமான நிலை இல்லை என்று உளவுத்துறை தந்த அறிக்கையே, இறுதி நேரத்தில் பல கோடி ரூபாயை இறக்கியதற்கான பின்னணிக் காரணமாகத் தெரிகிறது. இதன் மூலமாக, இந்த தொகுதிகளில் வெற்றி நமக்கு நிச்சயம் என்று ஆளும்கட்சியினர் நம்புகின்றனர். ஆனால், பணம் கொடுத்தாலும் பெரும்பான்மை மக்களின் மனங்களில் மாற்றம் வருமா என்பது சந்தேகமாகவுள்ளது.ஏனெனில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க., அமைச்சர்களாக இருந்த சிலரது தொகுதிகளில், 'திருமங்கலம் பார்முலா'வில் பணம் வாரி இறைக்கப்பட்டது; ஆனால், அவர்களில் யாருமே வெற்றி பெற முடியவில்லை. அதேபோல, இப்போதும் பணத்தால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆனால், பல முனைப் போட்டியின் காரணமாக, வெற்றி வித்தியாசம் சில ஆயிரங்களே இருக்கும் என்பதால், அந்த அளவிற்கான ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியுமென்பதே ஆளும்கட்சியினரின் நம்பிக்கையாகத் தெரிகிறது. அப்படி ஒரு வேளை நடந்தால், 'கொங்கு மண்டல மக்கள், பணத்துக்கு விலை போகிறவர்களில்லை' என்ற பெருமை மிகு சரித்திரம், மாற்றி எழுதப்படும்.அதனால் ஏற்படும் பாதிப்புகளை, ஓட்டுக்குப் பணம் வாங்கிய மக்கள் மட்டுமின்றி, வாங்காத மக்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இலவசப் பொருட்களுக்காகவும், 500 ரூபாய் பணத்துக்காகவும் தகுதியற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் பலனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும்.நமது ஊருக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கே கிடைக்க வேண்டிய பல்வேறு நல்ல திட்டங்களும் கிடைக்காமல் போகும்; ஏற்கனவே, மூன்றாண்டுகளாக ஊருக்குள் எந்த விதமான வளர்ச்சிப் பணிகளும் நடக்காமல் இருப்பதை, நமது வாக்கின் மூலமாக கண்டிக்கத் தவறினால், மீதமுள்ள இரு ஆண்டுகளும் எந்தப் பணிகளையுமே செய்யாமல் இந்த ஆட்சி முடிந்து விடும்.லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஓட்டுப்போடுவது நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பதை மக்கள் உணர வேண்டும்; இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்பதை பணத்தை வைத்து தீர்மானிக்க முயற்சித்திருக்கிறார்கள்; அதனால், யாருக்குப் போடக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு, மக்களுக்கு உள்ளது.
நேற்று முன் தினம் வரையிலும், பணம் கொடுத்தது தொடர்பாக, கோவை மாவட்டத்தில் 146 புகார்களும், திருப்பூர் மாவட்டத்தில் 108 புகார்களும், நீலகிரி மாவட்டத்தில் 55 புகார்களும் வந்துள்ளன; ஆனால், இந்த மாவட்டங்களில் முறையே 6, 4 மற்றும் 2 என மொத்தமே 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்; இதிலிருந்தே தேர்தல் கமிஷன் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளின் வேகம் புரிகிறது.

புகார்கள் 309 கைது 12: