துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியபோது, துணை வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம். விதிமீறல் தொடர்பான வழக்குகளை தேர்தல் முடிந்த பிறகும் ஆணையம் கண்காணிக்கும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் இறுதிச் செலவுக் கணக்கை வேட்பாளர் தாக்கல் செய்யவேண்டும் என்றும் பிரவீண்குமார் கூறினார்.