இன்று (ஏப்ரல் 12), மீண்டும் ஒரு, 'மெகா லோக்
அதாலத்'திற்கு அகில இந்திய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆங்கிலமும்,
இந்தியும் கலந்த, அந்த மூன்று வார்த்தைகளை தமிழில் 'மாபெரும் மக்கள் நீதிமன்றம்' என்றழைக்கலாம். இதன் மூலம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு, ஒரே நாளில் தீர்வு காணப்போவதாக கூறப்பட்டு உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னால், 2013 நவம்பர், 23ம் தேதியன்றும் இதேபோன்றதொரு, 'மெகா லோக் அதாலத்' நடத்தப்பட்டது.
அதில் ஒரே நாளில். 35 லட்சத்து,10 ஆயிரத்து, 390 வழக்குகள் பைசல் செய்யப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அவற்றில், தமிழகத்தில் மட்டும், 13.77 லட்சம் வழக்குகள் முடிவுற்றதாக கணக்கு காட்டப்பட்டது. இப்படி முழு விளம்பரத்துடன், ஒரே நாளில் லட்சக்கணக்கான வழக்குகள் முடிவு செய்யப்பட்டதாக நீதித்துறை சார்பாக கூறப்படும்போது; ஏன் இன்னும் நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்க நிலையில் உள்ளன என்ற, கேள்வி எழுகிறது.
கடந்த மார்ச் இறுதியில், சென்னை ஐகோர்ட்டில் மட்டும் நிலுவையில் இருந்த வழக்குகள் ஏறத்தாழ, 5.75 லட்சம். 2013 மார்ச் இறுதியில், ஏறத்தாழ, 5.25 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.அதாவது, 2013 - 14 ஆண்டில் ஐகோர்ட்டில் (மதுரை அமர்வு உட்பட) பைசல் செய்யப்பட்ட வழக்குகளை தவிர்த்து, மேலும், 50,000 வழக்குகள் கூடியுள்ளன என்பதை தான் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதே போல, கீழ் கோர்ட்டுகளில், ஏறத்தாழ, 50 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாம், எப்பொழுது தீர்க்கப்படும் என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. நிலைமை எவ்வாறு உள்ளது என்றால், புது வழக்குகளை அனுமதிக்கவில்லை என்றாலும், தற்போது, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்யவே கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளுக்கும் மேலாகும்!நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு, ஆலோசனை கூற, பல கமிஷன்களின் அறிக்கைகளும், பல விவாத மேடை கருத்துகளும் இருப்பினும், இன்று வரை, கோர்ட்டுகளில் உருப்படியான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
நீதி துறை விழாக்களிலும், கருத்தரங்குகளிலும், மாற்றுத் தீர்வு முறை (Alternative Dispute Resolution) பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த கருத்துக்களின் சாராம்சம், 'தற்பொழுது உள்ள நீதிமன்றங்களால் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண்பதென்பது இயலாது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் சட்டப் பிரச்னைகளை இணக்குவிப்பு மற்றும் சமரசங்கள் (Mediation and Conciliation) மூலம் தீர்த்துக் கொள்ளவும். அது, பயனளிக்காத போது, மக்கள் கோர்ட்டுகள் (Lok Adalat) மூலம் தீர்வு காணவும்' என்பதே.உரிமையியல் நடைமுறை சட்டத்திலும் (1908), சட்ட சேவை ஆணைய சட்டத்திலும் (1987), இதற்கான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த சட்டங்களின் கீழ், கோர்ட்டுகளே தங்கள்முன்னால் விசாரணைக்கு வரும் வழக்குகளில் தீர்வு காண, மாற்று தீர்வு மையங்களுக்கு செல்லும்படி, வழக்காடிகளுக்கு அறிவுறுத்த கடமைப்பட்டு உள்ளன.மாற்றுத் தீர்வு மையங்களில், சமரச முடிவுகள் ஏற்படவில்லை என்றால், அந்த வழக்குகள் மீண்டும் உரிய கோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சட்டப்படியான விசாரணைக்கு பின்னரே தீர்ப்பளிக்க வேண்டும்.இதை தவிர, தாலுக்கா, மாவட்ட மற்றும் மாநில ரீதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ள சட்ட உதவி மையங்கள், அடிக்கடி, மக்கள் கோர்ட்டுகளுக்கான ஏற்பாடுகளை செய்து, கோர்ட்டுகளுக்கு வழக்குகள் வரும் முன்னரே தீர்வு காணும் (pre-litigation strategy) ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
அலைபேசி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டண பாக்கிகள், கடன் அட்டை நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய பாக்கி தொகைகள், வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் கட்டணங்கள், 'செக்' மோசடி வழக்குகள் உள்ளிட்டவை குறித்து, சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு அறிவிப்பு கொடுத்து, அவர்களை நேரில் வரவழைத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் முன்னிலையில்அவர்களுக்கு ஆலோசனை அளித்து, தீர்வு காண முற்படும் முயற்சியே இவையாகும்.வழக்கு மன்றங்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய வழக்குகள், இதன் மூலம் தவிர்க்கப்படுவதாக காரணம் கூறினாலும், உண்மையில் இந்த முயற்சிகள், தனியார் அலைபேசி நிறுவனங்கள், கடன் அட்டை நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு, தொகைகளை பெற்றுத் தரும் முயற்சிகளேயன்றி வேறொன்றுமில்லை. இந்த முயற்சிகள், தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலுவைகள் மீட்பு முகவர்கள் (Recovery Agents) செயலை ஒத்ததாகும்.
கடந்த நவம்பரில் நடந்த, மெகா லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும், 11 லட்சம் வழக்குகள் இந்த வகையை சார்ந்ததாகும். காசோலை திருப்பப்பட்ட வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறிய சிறு குற்றவியல் வழக்குகளுமே, இவற்றில் பெரும்பாலானவை.மிக அதிக அளவில் தீர்வு காணப்பட்ட வழக்குகள் என்ற எண்ணிக்கையில், ஏற்கனவே தீர்வு காணப்பட்ட வழக்குகளையும், ஒரே வழக்கிற்கு இரு வழக்கு எண்கள் கொடுக்கப்பட்டும் கணக்கில் காட்டப்பட்டன என்று, கீழ்கோர்ட் நீதிபதிகள் சிலர் தெரிவித்தனர்.இப்படிப்பட்ட பூச்சு வேலைகளால் தேக்க நிலைகள் மாறாது. ஒவ்வொரு வழக்காடியும் கோர்ட்டுக்கு வருவதற்கு முன், தன் உற்றார், உறவினர், நண்பர்கள், சமூக தலைவர்கள், காவல் துறை ஆகியோரை அணுகி; அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத பின்னரே, கோர்ட்டுகளை கடைசியாக தான் அணுகுகிறார்கள். அவர்களிடம் மாற்றுத் தீர்வுகளை முன்மொழிவது ஏமாற்று வேலையே!
வழக்குகளில், கோர்ட்டுகள், உடனடி தீர்வு காணவில்லை என்றால், அவை கட்டப் பஞ்சாயத்துகளுக்கும், தாதாக்களின் அராஜகங்களுக்குமே வழிவகுக்கும். வழக்குகளின் தேக்க நிலை பற்றி கருத்து கூறுபவர்கள், பெரும்பாலும், நீதிபதிகள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு போதாமை மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழையாமையையே காரணங்களாக கூறுகின்றனர். இவை எல்லாமும் வழக்குகளின் தேக்கத்திற்கு காரணிகளாக இருப்பினும், அவற்றையும் மீறி, வேறு சில முக்கிய காரணிகளும் உண்டு.
அவை:
* எல்.கே.ஜி., படிக்கும் சிறுமி பள்ளிக்கு செல்லும் நாட்களை விட குறைந்த நாட்களே, இந்திய கோர்ட்டுகள் செயல்படுகின்றன. கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கமுற்ற நிலையில், வருடத்திற்கு, 210 நாட்கள் மட்டுமே, நீதிமன்றங்களை திறந்து வைத்திருப்பது, நியாயமற்ற
செயலாகும்
*தமிழகத்தில், வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பு போராட்டங்கள், ஆண்டுக்கு, 30 முதல், 40 நாட்கள் நடைபெறுகின்றன. புறக்கணிப்பு தினங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும் முடக்கப்படுகின்றன
*நீதிபதிகள் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளில், தகுதிகளும், திறமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன
*விசாரணையை அடிக்கடி ஒத்தி வைக்க வாங்கப்படும் வாய்தாக்களினால், வழக்குகளின் தீர்வில் கால விரயங்கள்
ஏற்படுகின்றன
*பொய் வழக்குகள் போடப்படுவதை தடுக்கும் விதமாக, அப்படிப்பட்ட வழக்குகளை தொடரும் வழக்காடிகளுக்கு உரிய அபராத தொகைகளை விதிப்பதற்கு நீதிபதிகள் தயங்குகின்றனர். இதனால், எப்படிப்பட்ட பொய் வழக்குகள் போட்டாலும், தண்டனை கிடையாது என்ற தெம்பு,
வல்லடி வழக்காடிகளுக்கு ஏற்படுகிறது
*இந்திய சட்ட அமைப்பு முறையில், சிறு வழக்குகளுக்கும் மேல் முறையீடு, சீராய்வு மனுக்கள், அதற்கும் மேல் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் மேல் முறையீடுகள் என்று, பல கட்ட முறையீடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதனால், சிறிய உரிமையியல் வழக்குகள், வீட்டு வாடகை வழக்குகள், தொழிலாளர் வழக்குகள் முடிவதற்கு, 10 முதல், 20 ஆண்டுகளாகின்றன. எனவே, பல கட்ட மேல்முறையீடுகளைத் தவிர்ப்பதற்கு சட்ட திருத்தங்களும் தேவை
இவை தவிர, சட்டக்கல்வி என்பது கேலிக்கூத்தாகிவிட்டதும், ஒரு முக்கிய காரணம். திறமையையும், தகுதியையும் வளர்ப்பதற்கு பதிலாக, சட்ட ஞானமே இல்லாதவர்கள் கூட, வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கு, இங்கு வாய்ப்புகள் உள்ளன. தகுதியான சட்ட ஆலோசனை இல்லாமல் தவிக்கும் அல்லது ஏமாற்றப்படும் வழக்காடிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது.வழக்குகளின் தேக்க நிலைக்கான காரணிகளை அறிந்து, அவற்றை உரிய முறையில் களைய முற்படுவதே தேக்கங்களை தவிர்க்கும். மேம்போக்கான பூச்சு வேலைகள் காரியத்திற்கு உதவாது.வழக்குகளின் தேக்கம்! வழக்காடிகளுக்கு ஏக்கமே!!

5.25 லட்சம் வழக்குகள்

உடனடி தீர்வு காண்பதென்பது இயலாது:

மெகா லோக் அதாலத்தில் தீர்வு
கடந்த நவம்பரில் நடந்த, மெகா லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும், 11 லட்சம் வழக்குகள் இந்த வகையை சார்ந்ததாகும். காசோலை திருப்பப்பட்ட வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறிய சிறு குற்றவியல் வழக்குகளுமே, இவற்றில் பெரும்பாலானவை.மிக அதிக அளவில் தீர்வு காணப்பட்ட வழக்குகள் என்ற எண்ணிக்கையில், ஏற்கனவே தீர்வு காணப்பட்ட வழக்குகளையும், ஒரே வழக்கிற்கு இரு வழக்கு எண்கள் கொடுக்கப்பட்டும் கணக்கில் காட்டப்பட்டன என்று, கீழ்கோர்ட் நீதிபதிகள் சிலர் தெரிவித்தனர்.இப்படிப்பட்ட பூச்சு வேலைகளால் தேக்க நிலைகள் மாறாது. ஒவ்வொரு வழக்காடியும் கோர்ட்டுக்கு வருவதற்கு முன், தன் உற்றார், உறவினர், நண்பர்கள், சமூக தலைவர்கள், காவல் துறை ஆகியோரை அணுகி; அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத பின்னரே, கோர்ட்டுகளை கடைசியாக தான் அணுகுகிறார்கள். அவர்களிடம் மாற்றுத் தீர்வுகளை முன்மொழிவது ஏமாற்று வேலையே!
உள்கட்டமைப்பு போதாமை