பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவு, மே, 23ம் தேதி வெளியிட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில், இரு மையங்களில் விடைத்தாள்
திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு, கடந்த, 25ம் தேதி துவங்கி ஏப்., ஒன்பதாம் தேதி நிறைவு பெற்றது. இதில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு மாதிரி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதியுதவி, சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உட்பட மொத்தம் 154 பள்ளிகளில் இருந்து, 14,965 மாணவ, மாணவியர், 46 மையங்களில் தேர்வு எழுதினர்.
இதேபோல், கோபி கல்வி மாவட்டத்தில், 344 பள்ளிகளில் இருந்து 49 மையங்கள் மூலம் 16,309, மாணவ, மாணவியர் உட்பட, இரு கல்வி மாவட்டத்திலும் மொத்தம், 31,274 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வை எழுதினர். தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள்களை விரைவாக மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு, திண்டல் வேளாளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், கோபி கல்வி மாவட்டத்துக்கு, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய விடைத்தாள்கள் வந்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...