"நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆய்வுகள் முக்கியம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆய்வுகள் முக்கியம் என்று மத்திய பாதுகாப்புத் துறையின் போர் வாகனங்கள் ஆய்வு
மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.சிவக்குமார் கூறினார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 13-ஆவது பல்கலைக்கழகத் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற அவர் பேசியது:
உயர்கல்வியில் அடிப்படை ஆய்வுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அந்த வகையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. இங்கு ஆய்வுக்கு சிறந்த கட்டமைப்புகள் உள்ளன. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலிருந்து நிறைய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது பாராட்டுக்குரியது.
இங்கு ஆய்வுப் பணிகளை மேம்படுத்த மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாராக உள்ளது. எங்களின் நிறுவனத்துக்கு எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத போர் வாகனங்கள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது. அதை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறைவாக இருக்க, இங்கு ஆய்வுப் பணிகளில் உள்ள தொய்வே காரணம். உலகில் தற்போது கணினித் துறை ஆய்வில் முதன்மையாக இருப்பது சீனாதான்.
நாட்டின் எந்த ஒரு முன்னேற்றத்துக்கும் ஆய்வுகள் முக்கியம். ஒவ்வொருவருக்கும் திறமை உண்டு. அந்த திறமையை குழுவாக சேர்ந்து வெளிப்படுத்தினால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார் சிவக்குமார்.
விழாவில், கல்லூரியின் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட அருண் ஆர்.பணிக்கருக்கு காஞ்சி காமகோடி விருதும், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட ஆர்.நித்யா சர்மாவுக்கு நீதியரசர் ஸ்ரீ பதஞ்சலி சாஸ்திரி விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சேதுராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலைக்கழக முதன்மையர் சுவாமிநாதன், பதிவாளர் ஜி.பாலச்சந்திரனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...