ஓட்டளிக்காவிட்டால் குடிநீர் கிடையாது: அஜித் பவார் மிரட்டல்

:'சரத் பவார் மகள், சுப்ரியா சுலேவுக்கு ஓட்டுப் போடாவிட்டால், குடிநீர் சப்ளையை துண்டித்து விடுவோம்' என, பாரமதி தொகுதி
வாக்காளர்களுக்கு, மகாராஷ்டிரா துணை முதல்வர், அஜித் பவார் மிரட்டல் விடுக்கும், 'வீடியோ' வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரியா சுலே போட்டி:


மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசை சேர்ந்த, பிரித்விராஜ் சவான் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், துணை முதல்வராகவும் உள்ளனர்.இந்த லோக்சபா தேர்தலிலும், இரண்டு கட்சிகளும் இணைந்தே போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சி தரப்பில், பா.ஜ.,வும், சிவசேனாவும், இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.இங்குள்ள, பாரமதி லோக்சபா தொகுதியில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இங்கு, ஆளும் கட்சி கூட்டணி சார்பில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பாரமதி தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு, சுப்ரியாவுக்காக, துணை முதல்வர் அஜித் பவாரும், அவரின் ஆதரவாளர்களும், ஓட்டு கேட்டுச் சென்றனர்.அப்போது, அங்குள்ள மக்களிடம், 'சுப்ரியாவுக்கு ஓட்டுப் போடாவிட்டால், தேர்தல் முடிந்ததும், தண்ணீர் சப்ளையை துண்டித்து விடுவோம்' என, அஜித் பவார் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கமிஷனில் புகார்


இந்த தொகுதியில், ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் சுரேஷ் கோப்தே, இது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளதோடு, சர்ச்சைக்குரிய, 'சிடி'யையும் ஒப்படைத்துள்ளார்.''அந்த, 'சிடி'யில், ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை. ஆனாலும், அஜித் பவார் மிரட்டல் விடுத்தது உண்மை தான்,'' என, சுரேஷ் கோப்தே கூறியுள்ளார். இந்த விவகாரம், அங்கு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாரமதி லோக்சபா தொகுதி யின் தற்போதைய எம்.பி., சரத் பவாரின் மகள் சுப்ரியா. மீண்டும் அவரே அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவில், 2009 லோக்சபா தேர்தலில், 21 இடங்களில் போட்டியிட்ட சரத்பவார் கட்சி, எட்டு இடங்களில் வெற்றி பெற்றது. மேகாலயா மாநிலத்திலும், ஒரு எம்.பி.,யை அந்த கட்சி கொண்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...