ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவை தடை செய்து ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு, நேற்று பரிந்துரை செய்தது

'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவை தடை செய்து, பிப்ரவரியில் பிறப்பித்த
இடைக்கால உத்தரவு தொடரும்' என, நேற்று அறிவித்த சுப்ரீம் கோர்ட், 'கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை அரசியல் சாசன பெஞ்ச் ஆராய்ந்து முடிவு செய்யும்' என தெரிவித்து, வழக்கை அந்த பெஞ்சுக்கு மாற்றியது.

காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் ராஜிவ், 1991ல், தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது, ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு உதவியதாக, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அது போல், அந்த வழக்கில் தொடர்புடைய, முருகன் மனைவி நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஏழு பேரும், 1991 முதல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது, ஜனாதிபதி முடிவெடுக்க காலதாமதம் ஆனதால் தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.




தண்டனை குறைப்பு: அந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 18ல், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இதற்கான உத்தரவை, தமிழகத்தைச் சேர்ந்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு பிறப்பித்தது. இதையடுத்து, பிப்ரவரி 19ல், தமிழக முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா தலைமையில் கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில், அந்த மூவரின் ஆயுள் தண்டனை மற்றும் அந்த வழக்கில் தொடர்புடைய நால்வரின் ஆயுள்
தண்டனையையும் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு, தமிழக சட்டசபை கடிதம் அனுப்பியது.



மத்திய அரசு முறையீடு: ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த விவகாரத்தை அப்படியே விடத் தயாராக இல்லை. காங்கிரசை சேர்ந்த ராஜிவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையீடு செய்தது. அதில், மத்திய அரசு சட்டங்களின் படி தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என வாதிட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 20ல், தடை உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க தடை விதித்தது; அதை, தமிழக அரசு எதிர்த்தது. இந்த வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி, சதாசிவம் தலைமையிலான, 'பெஞ்ச்' இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு, நேற்று

பரிந்துரை செய்தது. மேலும், பிப்ரவரி 18ல், பிறப்பிக்கப்பட்ட, ஏழு பேர் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என, நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். மேலும், ஆயுளாக தண்டனை குறைக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதா என்பதை முடிவு செய்யும் அரசியல் சாசன பெஞ்ச், அது தொடர்பான ஏழு கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும், அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'ஆயுள் தண்டனை காலத்திற்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்து விட்ட, ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும்' என, எதிர்பார்த்திருந்த ராஜிவ் கொலையாளிகளின் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...