பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி
முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 20 கடைசி தேதியாகும். தமிழகம் முழுவதும் மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மையம் உள்பட தமிழகம் முழுவதும் 59 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 20 கடைசி தேதியாகும். இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி. ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
விண்ணப்பங்கள் மே 3-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாது.
ரேண்டம் எண் வெளியீடு, ரேங்க் பட்டியல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.