"விடாமுயற்சி, கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

"மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து விடாமுயற்சி, கடின
உழைப்புடன் போராடினால் இறுதியில் வெற்றி நிச்சயம்" என, தஞ்சை அருகே திருவையாறிலுள்ள அரசர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று கலெக்டர் சுப்பையன் பேசினார்.
தஞ்சை அடுத்த திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், கலெக்டரும், கல்லூரி தலைவருமான சுப்பையன் தலைமை வகித்து 245 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
வாழ்க்கையில் மாணவர்கள் ஒவ்வொருவரும் உன்னதமான லட்சியங்களை கைக்கொள்ள வேண்டும். உங்களை பொறுத்தவரையில் எப்போதும் அதிக வாய்ப்புகள், அதிக சவால்களும் வழி நெடுக உங்களுக்காக காத்து கொண்டிருக்கின்றன. இதனை கைப்பிடித்து கொண்டு நீங்கள் முன்னேற வேண்டும்.
எத்தகைய பிரிவில் பட்டங்களை பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த பிரிவில் சிறப்பான முறையில் கவனம் செலுத்தி உள்ளோமா? என்பது தான் முக்கியம். எண்ணங்களை சீராக வைத்துக்கொண்டு விடாமுயற்சி, கடின உழைப்புடன் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து, திட்டமிட்டு இறங்கி போராடினால் வெற்றி நிச்சயம். இதில், சந்தேகம் ஏதுமில்லை." இவ்வாறு, அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து 18 மாணவ, மாணவியருக்கு தரச்சான்றிதழையும், இளங்கலை தமிழ் பட்டம் 67 பேருக்கும், இளங்கலை சமஸ்ஹிருதம் பட்டம் 6 பேருக்கும், இளங்கலை சமூக பணி பட்டம் 4 பேருக்கும், இளங்கலை கம்ப்யூட்டர் அறிவியல் பட்டம் 36 பேருக்கும், இளங்கலை வணிகவியல் பட்டம் 41 பேருக்கும், இளங்கலை ஆங்கிலம் பட்டம் 12 பேர் என, மொத்தம், 245 பேருக்கு பட்டங்களை கலெக்டர் வழங்கினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...