பள்ளிக்கூடத்தில் கழிவறையை கழுவும் வேலையும், மைதானம், வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை மாணவர்களை செய்யச் சொல்லக் கூடாது என்பது வரவேற்கக் கூடிய ஒன்று... ஆனால் அதனை யார் செய்வது? என்பதையும் விளக்கி ஓர் உத்திரவு வெளியிட்டால் அனைவரும் அறிந்து பயன் பெறுவர்


பள்ளிக்கூடத்தில் கழிவறையை கழுவும் வேலையும், மைதானம், வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை மாணவர்களை செய்யச்
சொல்லக் கூடாது என்பது வரவேற்கக் கூடிய ஒன்று...
ஆனால் அதனை யார் செய்வது? என்பதையும் விளக்கி ஓர் உத்திரவு வெளியிட்டால் அனைவரும் அறிந்து பயன் பெறுவர். எதைச் சொன்னாலும், அப்படிச் சொல்லிட்டாங்களா? என்று வாயைப் பிளக்கும் நாம், அப்படி என்றால் அதற்கு தீர்வு என்ன? என்பதைப் பற்றி மட்டும் யோசிக்கவும், வாய் திறக்கவும் மறப்பதேன் அல்லது மறுப்பதேன்?
1980 களில் நாங்கள் தொடக்கநிலைப் பள்ளிகளில் பயிலும் காலத்திலேயே வகுப்பறை 4 அல்லது 5 சிறு குழுக்களாகப் பிரிந்து 1. கழிவறை பராமரிப்பு 2. வகுப்பறை பராமரிப்பு 3. கரும்பலகை பராமரிப்பு 4. மைதான பராமரிப்பு 5. தாவரங்கள் பராமரிப்பு என ஒவ்வொரு குழுவும் ஒரு வேலையை சுழற்சி முறையில் செய்து வருவோம். அந்த செயல்பாடுகள் பல நல்ல விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்ற கற்றுத் தந்தது. எங்கள் பெற்றோரும் ஒரு நாள் கூட அதனை ஆட்சேபித்ததில்லை...குறை கூறியதும் இல்லை....
சமூக அக்கறை, சமுதாய நலன், தன் சுத்தம், பொது சுகாதாரம், பொது சுத்தம், தலைமைக்கு கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல், பெரியோரை மதித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக நல் பழக்க வழக்கங்களை கற்றுத் தந்தது.
ஆனால் இன்று அரசாணைகள் என்ற பெயராலும், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் தங்களது செய்தி வெறித் தன்மையாலும், தங்களது தான்தோன்றித்தனத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும், அதிக பிரசங்கித் தனத்தாலும் சமுதாயத்திலும், பள்ளிகளிலும், மாணவர்களிடமும் நல்வழிகளையும், நல் எண்ணங்களையும் சிதைத்தும், அவற்றை குழிதோண்டிப் புதைத்தும் வருகின்றன.
சமூக சிந்தனையும், அக்கறையும் உள்ளவர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...