"மதம், பிராந்தியம், ஜாதி அடிப்படையில், ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படுகின்றனர். இதற்கு தடைவிதிக்க வேண்டும்"
என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இந்த விவகாரத்தில் தலையிட்டு, ராணுவ விவகாரங்களில், தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை" என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஐ.எஸ்.யாதவ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ராணுவத்தில், ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட பிராந்தியத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள படைப் பிரிவுகளுக்கு, அந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்களையே சேர்க்கின்றனர்; இது, சட்ட விரோதம். எனவே, சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.