வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இணையதளம் மூலம் வாக்கை செலுத்துவதற்கான
வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. கேரளாவின் கோழிக்கோடு
பகுதியைச் சேர்ந்தவர் ஷம்ஜீர். இவர் 12 ஆண்டுக்கு முன்பு ஐக்கிய அரபு
நாட்டுக்கு வேலைக்காக சென்றுவிட்டார். எனினும், இவருக்கு கோழிக்கோட்டில்
வாக்கு இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியராக அவர் தன்னைப் பதிவு செய்து
கொண்டுள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை
தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் ஏராளமான
இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க
வேண்டும் என்றால், இந்தியாவுக்கு வந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால்
அவர்களுக்கு வாய்ப்பே வழங்கப்படுவதில்லை.
ஆனால், உலகம் முழுவதும் 114 நாடுகள், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிரஜைகளுக்காக, அந்தந்த நாடுகளில் உள்ள தங்கள் தூதரகங்களில் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. இதில் 14 ஆசிய நாடுகளும் அடங்கும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இதுபோன்ற எந்த வாய்ப்பும் இல்லை. இப்போது 11,844 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இதனால் இணையதளத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் ஷம்ஷீர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல், பெரும்பாலான தொகுதிகளில் வெளியிடப்பட்டுவிட்டது.
இப்போதைய நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்வது என்பது இயலாத காரியம்தான். ஆனால், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எந்தெந்த வகையில் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறித்த வாய்ப்புகளை ஆராய, தேர்தல் ஆணையத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையின்பேரில், இணையதளம் மூலம் வாக்களிக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணைய வக்கீல் கூறினார். ஆனால், முதல்கட்ட தேர்தல் மட்டுமே நடந்துள்ள நிலையில், இன்னமும் கால அவகாசம் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் தபால் வாக்குமூலம் அவர்கள் வாக்கு களை செலுத்துவது குறி த்து பரிசீலிக்கும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.