"பெரும்பாலான முக அழகு கிரீம்களில்
பேரபீன் என்ற பொருள் சேர்க்கப்பட்டு உள்ளதால் புற்றுநோய் பாதிப்பு
வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்" என, இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) எச்சரித்துள்ளது.
நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 14 வகையான முக அழகு "கிரீம்"களை இந்திய நுகர்வோர் சங்கம் (கன்சர்ட்) ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய நுகர்வோர் சங்க நிறுவன தலைவர் தேசிகன், ஆலோசகர் ஹேமலதா ஆகியோர் கூறியதாவது:
பெரும்பாலான முக அழகு கிரீம்களில் "பேரபீன்" எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு உள்ளது. இது தோலை எளிதாக ஊடுருவி ரத்தத்தில் கலக்கக் கூடியதாகவும், மார்பக கட்டிகளை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது.
அரசு நிர்ணயித்த வரையறைக்குள் இருந்தாலும், இத்தகைய பொருட்கள் சேர்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும். சில பிராண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ள இதர முக்கிய மூலப் பொருட்கள் பற்றிய விவரங்கள் லேபிளில் இல்லை. தினமும் அழகை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என, மிகைப்படுத்தப்படுகிறது.
மருந்து விளம்பரம் தொர்பாக 1954ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை கிரீம் விளம்பரங்களுக்கும் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.