இந்திய பல்கலைகளை உலகத் தரத்தில் உயர்த்துவதற்கு, தீவிரமான முயற்சிகள்
எடுக்கப்பட வேண்டும் என வெளிநாடு
வாழ் இந்திய தொழிலதிபர் லார்ட் ஸ்வராஜ் பால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தகுதியான மனிதவளம் இருந்தால்தான், இந்தியா, எதிர்காலத்தில் ஒரு பொருளாதார வல்லரசாக உயர முடியும். உலகின் சிறந்த 200 பல்கலைகளின் பட்டியலில், எந்த இந்திய கல்வி நிறுவனமும் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக உள்ளது.
இந்திய பல்கலைகளின் தரம் கவலைப்படும்படியாக உள்ளது. சர்வதேச தர உயர்வு என்பது, நமது ஆசிரியர் மற்றும் மாணவர் சமூகத்தின் மன ஆற்றலை அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் வலிமை என்பது அதன் கல்வியமைப்பிலேயே நிலைத்துள்ளது. இதன்மூலமே, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் சாத்தியமாகிறது. எனவே, கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமையாக, அனைத்து சமூகங்களிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.