தேர்தல் பணியால் ஜாதிச்சான்று பெறுவதில் பாதிப்பு

தேர்தல் பணியால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜாதி சான்று வழங்குவது தடைபடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்
.
தமிழகத்தில், வரும் 24ம் தேதி தேர்தல் நடைமுறைகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் வருவாய்த்துறையின் அனைத்து அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் 24ம் தேதியுடன் முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை வரை தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளதால் தொடர்ந்து வருவாய் துறையினர், இப்பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆண்டு தோறும் பள்ளிகளில் இருந்து வருமானம், ஜாதி, இருப்பிட சான்று தேவைப்படும் மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை அந்தந்த தாசில்தார் அலுவலகத்திற்கு அளித்து வந்தனர். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் வருமானம், ஜாதி, இருப்பிட சான்று வழங்கப்பட்டு வந்தது.
இப்போது தேர்தல் பணிக்கு வருவாய்த்துறையில் தாசில்தார், துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதால், ஆயிர கணக்கில் பள்ளிகளில் இருந்து வரும் விண்ணப்பத்துக்கு சான்று வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அலுவலர்கள் கூறியதாவது: தேர்தல் பணியில் உள்ள துணை தாசில்தார் ஒருவரை, சுழற்சி அடைப்படையில் சான்று வழங்கும் பணிக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, மாணவர்களுக்கு சான்று வழங்கும் பணி பாதிக்காது என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...