மரக்கிளையை வெட்டியவர் 10 மரக்கன்று வளர்க்கணும்!


'மரத்தின் கிளையை வெட்டியவர், அதற்கு பரிகாரமாக அதே பகுதியில் 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என, துடியலுார்
போலீசார் அறிவுறுத்தினர்.

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலுாரில் இருந்து கவுண்டம்பாளையம் வரை சாலையின் இருபுறமும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நடப்பட்ட இம்மரங்கள் தற்போது ஓரளவு வளர்ந்துள்ளன.மேட்டுப்பாளையம் ரோடு சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் வளர்ந்த மரத்தின் கிளையை, 'ஆவின்' பாலகம் நடத்தும் ஆனந்தகுமார், வெட்டினார். இது குறித்து சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், துடியலுார் போலீசில் புகார் கொடுத்தார்.துடியலுார் இன்ஸ்பெக்டர் நெல்சன், எஸ்.ஐ.,கள் சுந்தரராஜ், பொன்னுசாமி ஆகியோர், ஆனந்தகுமாரை அழைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

பின், மரக்கிளையை வெட்டியதற்கு பரிகாரமாக அதே பகுதியில் 10 மரக்கன்றுகளை ஆனந்தகுமார் நட்டு பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அது தொடர்பான நடவடிக்கையை போலீசார் கண்காணிப்பர் எனவும் அவரை எச்சரித்து அனுப்பினர். போலீசாரின் இச்செயல் இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...