பள்ளி செல்லா குழந்தைகள் 903 பேர் : மாற்றுத்திறனாளிகள் அதிகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம், கடந்த மாதத்தில் மட்டும் நடத்திய கணக்கெடுப்பில்,
903 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் ஆர்வம் காட்ட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கணக்கெடுப்பு
தமிழகம் முழுவதும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா, இடைநிற்றல், புலம் பெயர்ந்த, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு, கடந்த மாதம் தொடங்கியது. ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 30 தேதி வரை கணக்கெடுக்கும் பணி நடந்தது. செங்கல் சூளை, அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கடைகள், நெசவாளர் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மாவட்டம் முழுவதும், 903 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களில், 291 மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளில் 170 சிறுவர்கள், 121 சிறுமிகளாவர். இவர்கள், 903 பேரும் இந்த 2014 -15ம் கல்வியாண்டில் அந்தந்த வட்டார பள்ளிகளிலும், உண்டு உறைவிட பள்ளிகளிலும் சேர்க்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் கடந்த 2013-14ம் ஆண்டு முழுவதும் எடுத்த கணக்கெடுப்பில் 2,693 குழந்தை கள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2014-15ம் கல்வியாண்டு முழுவதும் நடக்கவுள்ள கணக்கெடுப்பில் கடந்த ஆண்டைவிட பள்ளி செல்லா குழந்தை கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என, நம்புகிறோம். ஏப்ரல் 1ம் தேதி முதல் 30 தேதி வரையிலான கணக்கெடுப்பு முழுமையாக முடிக்கப்படவில்லை.
காட்டாங்கொளத்துார், செயின்ட்தாமஸ் மவுண்ட் ஆகிய ஒன்றியங்களில் கட்டுமான பணிகளும், செங்கல் சூளைகளும் அதிகம் இயங்குவதால், கணக்கெடுப்பு பணியை அந்த பகுதியில் துரிதப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்வம் இல்லை
அனைவருக்கும் கல்வி இயக்கம் நடத்திய ஒரு மாத ஆய்வில், மொத்தம் உள்ள 903 குழந்தைகளில், 406 பேர் பெண் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, அவர்களின் பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.


ஒன்றியம் வாரியாக கணக்கெடுக்கப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை:
ஒன்றியம் ஆண் பெண் மொத்தம்
காஞ்சிபுரம் 34 30 64
வாலாஜாபாத் 16 12 28
உத்திரமேரூர் 6 4 10
ஸ்ரீபெரும்புதுார் 44 44 88
குன்றத்துார் 15 25 40
திருப்போரூர் 29 27 56
காட்டாங்கொளத்துார் 22 25 47
திருக்கழுக்குன்றம் 17 16 33
அச்சிறுபாக்கம் 9 4 13
மதுராந்தகம் 11 9 20
லத்துார் 12 14 26
சித்தாமூர் 5 3 8
செயின்ட் தாமஸ் மவுண்ட்
(நகர்ப்புறம்) 55 33 88
செயின்ட் தாமஸ் மவுண்ட்
(கிராமப்புறம்) 52 39 91
மொத்தம் 327 285 612

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...