2-ஆம் இடம் பிடித்தார். மாநகராட்சிப் பள்ளியில் படித்தாலும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அசத்துகிறார் அவர்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுப்புலட்சுமி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம், தமிழ் 98, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.
சுப்புலட்சுமியின் தந்தை சண்முகம் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தாயார் சரஸ்வதி. சகோதரி உலகம்மாள் பொறியியல் பட்டதாரியாவார். மாநகராட்சிப் பள்ளியில் படித்தாலும் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளார் சுப்புலட்சுமி.
தேர்வில் சிறப்பிடம் பெற்றது குறித்து அவர் கூறுகையில், தினமும் காலை, மாலை வேளைகளில் படிப்புக்கு தனியாக நேரம் ஒதுக்கி படித்தேன். ஆசிரியர்கள், நண்பர்கள் எனக்கு பெரும் ஊக்கத்தை தந்தார்கள். ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி அதை முறையாகக் கடைப்பிடித்து வருகிறோம். அதனால் ஆங்கிலத்தை எளிதாக கையாள முடிகிறது. எனது பெற்றோர் மிகவும் கஷ்டமான சூழலிலும் கல்வி கற்க வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நல மருத்துவர் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் அவர்