பள்ளி பாடப்புத்தகங்களுக்கான "நோட்ஸ்" விலை அதிகரிப்பு

தமிழக "நோட்ஸ்" தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி நோட்ஸ்களின்
விலையில் கடந்த மாதம் 25 சதவீதம் அதிகரித்த நிலையில், நோட்ஸ்களுடன் "சிடி"யும் வழங்குவதாக கூறி, மேலும் 15 சதவீத விலையை உயர்த்தி உள்ளன.
தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் அரசே புத்தகங்கள், நோட்டுக்களை வழங்கி விடுவதால், நோட்ஸ்களை மட்டும் பெற்றோர்கள் வெளி மார்க்கெட்டில் வாங்குகின்றனர். தமிழகத்தில், கோனார், வெற்றி, மாஸ்டர், சுறா, சூர்யா, ஹீரோ, டால்பீன், டான், சேவியர், பாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புக்களுக்கு, நோட்ஸ்கள் வெளியிடப்படுகிறது.
ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது அனைத்து வகுப்புகளுக்கான நோட்ஸ்களும் கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. நோட்ஸ்களின் விலையை பொறுத்த வரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
நோட்ஸ்களின் விலை உயர்வுக்கு பேப்பர், அட்டை, கலிங்கம், நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வே காரணம் என நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த விலை உயர்வு பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நோட்ஸ்களுக்கு ஸ்டிக்கர் புக், பாடங்களின் தொகுப்புக்கள் அடங்கிய "சிடி"க்கள் இலவசமாக வழங்குவதாகவும், அதற்கான கூப்பன்கள் நோட்ஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிக்கர் புக், "சிடி"க்களை இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கும் நிறுவனங்கள் அவற்றுக்கான செலவு, லாபத்தை நோட்ஸ்களின் விலையில், மறைமுகமாக திணித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நோட்ஸில் உள்ள கூப்பனை பூர்த்தி செய்து, அந்நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் பின், கூப்பனில் உள்ள முகவரிக்கு "சிடி" அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் தான் "சிடி"க்கள் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தகவலின்படி "சிடி"க்கள் வழங்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...