விடுமுறை முடிந்து ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி

'கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,' என பள்ளிக் கல்வி இயக்குனர்
ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை.
பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில் கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில், அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...