பல்கலைக்கழக தேர்விற்கு படிக்க முடியாமல் கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள்
தவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அரசு கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அரசு கல்லூரிக்கு க.மாமனந்தல் பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில், மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் வெளியூரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள மின் மோட்டார் பழுதானதால், விடுதியில் தண்ணீரின்றி மாணவர்கள் அவதியடைகின்றனர். குளிக்கவும், மற்ற பிற தேவைகளுக்கும் மாணவர்கள் வயல்வெளி பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
விடுதியில் தண்ணீர் கிடைக்காததால், மாணவர்களுக்கு உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் மோட்டார் பழுது நீக்கம் செய்தபிறகு விடுதிக்கு வருமாறு விடுதி சமையலர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் விடுதியில் தங்கி படிக்க முடியாமல் மாணவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போதைக்கு சமையல் செய்ய தேவையான தண்ணீரை வெளியில் இருந்து மாணவர்கள் கொண்டு வந்து கொடுத்தபின், தேர்வுக்கான பாடங்களை படித்து வருகின்றனர். இதற்கிடையே, பழுதடைந்த மின் மோட்டாரை சமையலர் நேற்று பழுதுநீக்க கொண்டு சென்றுள்ளார். மாணவர்கள் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விடுதிக்கு தண்ணீர் வசதியை செய்து தர அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.