570 பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்

தமிழகத்தில் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளின் கல்வி செயல்பாடுகளை தேர்ச்சி சதவீத அடிப்படையில்
வெளியிட அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய "முதல் பெஞ்ச்" நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இரு வாரங்களில்...
"மாணவர்களின் நலன் கருதி ஒரே மாதிரியான பெயர்களைக்கொண்ட கல்லூரிகளின் பட்டியலை அவற்றின் "கோடு" எண்ணுடன், தனியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை இரு வாரங்களில் வெளியிட வேண்டும்" என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத விவரங்களை தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2002 முதல் 2005 வரையிலும், 2008 முதல் 2010 வரையிலும், பொறியியல் கல்லூரிகளின் கல்வி செயல்பாட்டின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி சதவீத விவரங்களை அண்ணா பல்கலை வெளியிட்டது. பின், இந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டது. தற்போது மீண்டும் தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை அண்ணா பல்கலை வெளியிட உள்ளது.
கலந்தாய்வில் முடிவு
பல்கலை வட்டாரம் கூறுகையில் "2011 முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டுகளில் 570 பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத விவரங்கள் வெளியிடப்படும். பல்கலையில், அனைத்து விவரங்களும் உள்ளன. எனவே, 10 நாட்களுக்குள், பல்கலை இணையதளத்தில் (www.annauniv.edu) பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விவரம் வெளியிடப்படும்" என, தெரிவித்தது.
புள்ளி விவரம் வெளியானால், கல்லூரிகளின் தரத்தை, மாணவர்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப கலந்தாய்வில் முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...