500/500 மதிப்பெண்களை அள்ளிய மாணவர்கள் - இதுவரை இல்லாத சாதனை

இந்தாண்டு, இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனையாக, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 500 மதிப்பெண்களை
அப்படியே 3 மாணவர்கள் அள்ளியுள்ளனர்.
இவர்கள், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள். அவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண். அவர்களின் விபரம்,
துர்கா தேவி - டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை - 500/500.

ஹேம வர்ஷினி - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர், சென்னை - 500/500.
விஜயமூர்த்தி - ஜி.ஆர்.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி, கோவை - 500/500.
மாநிலத்தின் கல்வி வரலாற்றில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தமட்டில், யாரும் முழு மதிப்பெண்களை அப்படியே வாங்கியதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...