மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: 9ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்

விழுப்புரம் மாவட்ட மாதிரி பள்ளிகளில் வரும் 9ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குவதாக சி.இ.ஓ. மார்ஸ்
தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரி பள்ளிகள் துவங்கி நடந்து வருகிறது. ஜி.அரியூர், சித்தால், விருகாவூர், பெரிய சிறுவத்தூர் பகுதிகளில் மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கான இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
ஆங்கில வழியில் 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த பள்ளியிலே வரும் 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பள்ளிகளில் வரும் 23ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
 இந்தாண்டு முதல் புதுப்பட்டு, உளுந்தூர்பேட்டை, கள மருதூர், ஏமப்பூர் பகுதிகளில் மாதிரி பள்ளிகள் நடக்கிறது. இது பற்றி மேலும் விபரம் அறிய விரும்புபவர்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மாதிரி பள்ளி தலைமை ஆசிரியயை சந்திக்கலாம். இவ்வாறு சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...