பிரான்ஸை நோக்கி செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு!

பிரான்ஸ் நாட்டிற்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களை விட, இப்போது அதிகரித்து
வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக கூறுப்படுவதாவது: கடந்தாண்டு, 3000 மாணவர்கள், இந்தியாவிலிருந்து, பிரான்ஸ் நாட்டிற்கு படிக்கச் சென்றனர். அவர்களில், 75% பேர் மேலாண்மை படிப்பை மேற்கொள்ள சென்றவர்கள்.
முந்தைய ஆண்டுகளில், ஆண்டிற்கு சுமார் 100 இந்திய மாணவர்களை ஈர்க்கக்கூடிய நாடாகவே பிரான்ஸ் திகழ்ந்தது. ஆனால், தற்போது அந்நாட்டின் ESC Rennes School of Business போன்ற கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பரில், ESC Rennes School of Business கல்வி நிறுவனத்தின் 210 விண்ணப்பதாரர்களில், 70 பேர் இந்தியர்கள். இதற்கு காரணம், அங்கு பயிற்றுவிக்கப்படும் அனைத்துப் பாடங்களும் ஆங்கில வழியிலானவை. மேலும், 80% பேராசிரியர்கள், பிரான்ஸ் நாட்டை சேராதவர்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பிரான்ஸ் முழுவதும், சுமார் 800 படிப்புகள், ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன. மேலும், அந்நாட்டின் விசா நடைமுறைகளில், கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், இந்திய மாணவர்களை ஈர்க்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...