வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால்,
மதுரை மாநகராட்சியின் குடிநீர் பிரச்னையை அடுத்த
ஒரு வாரத்திற்கு சமாளிக்கலாம்.
வைகை அணையிலிருந்து பெறப்படும் நீர் மூலம், வைகை முதலாம், இரண்டாம் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலிருந்து பெறப்படும் நீர், மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.பருவமழை பொய்த்ததால் வைகை அணை நீர்மட்டம் குறைந்ததுடன், மதுரையின் நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்திற்கு சென்றது. முன்கூட்டியே தொடங்கிய கோடை வெயிலால் வைகை அணையும் விரைந்து வறண்டு, வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மதுரை தள்ளப்பட்டது.இருநாட்களுக்கு ஒரு முறையாக இருந்த குடிநீர் வினியோகம், நான்கு நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. அணையிலிருந்து பெறப்பட்ட 75 கனஅடி நீர் 45 ஆக குறைக்கப்பட்டது.அதன் பிறகும் அணை வேகமாக வற்றியதால், மே 7 முதல் மதுரைக்கான குடிநீர் வினியோகத்தை நிறுத்த முடிவு செய்திருந்தனர். எதிர்பாராதவிதமாக கொளுத்தும் அக்னி நட்சத்திரத்திரத்தில் மழை கொட்டத் தொடங்கியது.வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்தொடங்கியுள்ளது. பெரியாறு அணை பகுதிகளிலும் மழை பெய்வதால், அங்கிருந்து வைகை அணைக்கு வரும் நீர் 100 கன அடியிலிருந்து 200 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதனால் மதுரையின் குடிநீருக்கு வைகை அணையிலிருந்து பெறப்பட்ட 45 கனஅடி நீர், முன்பு போல 75 கனஅடி நீராக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிக்கு ஒரு வாரத்திற்கு குடிநீர் பிரச்னை இல்லை.அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடர்ந்தால் ஜூன் வரை குடிநீர் பிரச்னையை சமாளித்துவிடலாம். மதுரைவாசிகளை கண்டு மனமிறங்கி வந்த மழையால் தற்காலிகமாக மாநகராட்சி தப்பியுள்ளது.
அரசு செயலர் மே 9ல் ஆய்வு : குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சில திட்டங்களை தயார் செய்து, அவற்றிக்கு ரூ.35 கோடி வரை செலவாகும் என மாநகராட்சி சார்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற அரசு, சில திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை தருமாறு அறிவுறுத்தி ரூ.19.4 கோடி ஒதுக்கியது. அதன் மூலமே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநகராட்சிக்கான குடிநீர் தேவை குறித்து ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை செயலர் சாய்குமாரை மதுரை செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. மே 9ல் அவர் மதுரை வருகிறார்.
மதுரையில் நாமக்கல் லாரிகள் : மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, தனியார் கிணறுகளிலிருந்தும், 'போர்வெல்'களிலிருந்தும் பெறப்படும் நீரை வினியோகம் செய்ய 100 லாரிகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சியில் தற்போதுள்ள லாரிகள் 10 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை. கூடுதல் கொள்ளளவு இருந்தால் தான் தாமதமின்றி சப்ளை செய்ய முடியும் என்பதால், நாமக்கல்லில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 23 லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநகராட்சி மற்றும் ஒப்பந்த லாரிகள் என 73 லாரிகளும் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.