புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்கள்
நடத்தும் போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்கவும்
, பரிசுகள் பெறவும் தடைவிதித்து தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் நன்மை கருதி, பள்ளிகளில் புகை பிடிப்பது, புகையிலை பயன்பாட்டுக்கு தடைவிதித்து முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையிலை பயன்பாட்டினால் வரும் பாதிப்பு, புகைப்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று அனைத்து பள்ளிகளிலும் பேனர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், பள்ளி மாணவர்கள் இடையே தவறான பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. சில தனியார் நிறுவனங்கள், சுய விளம்பரத்துக்காக, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சி போன்ற போட்டிகளை நடத்தி வருகின்றன. இதில் புகையிலை சார்ந்த பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில், சில நிறுவனங்கள் போட்டிகள் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, பள்ளிகளில் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வித போட்டிகள் நடத்தவும், பரிசு பொருட்கள் வழங்கவும், அந்நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கவும் அனுமதிக்க கூடாது என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், "மாவட்ட அளவிலோ, ஒன்றியங்கள் அளவிலோ, புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் நடத்தும் எவ்வித போட்டியிலும், மாணவர்கள் பங்கு பெற அனுமதி வழங்க கூடாது; பரிசு பொருட்களை வாங்க கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.