ஆனைமலை பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில்
உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலை
பொருட்களின் விற்பனை பகிரங்கமாகவே நடக்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள
பொதுமக்களுக்கு இவற்றால் புற்றுநோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு
கிடையாது. இதனால் கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி போதை
பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழக அரசு புற்றுநோயினை
ஏற்படுத்தக்கூடிய போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை
விதித்தது.
பகிரங்க விற்பனை
தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் சில மாதங்கள் கெடுபிடி காட்டிய சுகாதார துறையினர் பின் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் போதை பாக்குக்கு பெண்களும், போதை புகையிலைக்கு இளைஞர்களும் அடிமையாக தொடங்கி விட்டனர். கிராமப்பகுதிகளில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் பொருட்களை வாங்க வரும் பெண்கள், போதை பாக்கின் பெயரை கூறி கேட்டு வாங்கிச்செல்கின்றனர். இந்தகைய போதை பொருட்களினால் வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்டும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
வீணாகும் இளைய தலைமுறையினர்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "ஆண்கள் மது போதைக்கும், பெண்கள் போதை பாக்கு மற்றும் போதை புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது சமூகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிகமான மனித வளத்தை கொண்டது இந்தியா. இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது, மனித வளத்தை நாம் வீணாக்கி வருகின்றோம் என்பதையே காட்டுகிறது. இவற்றின் விற்பனையை தடுப்பதில் மெத்தன போக்கு கூடாது" என்றனர்.
தேவை கடுமையான சட்டங்கள்
இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், "போதை பொருட்களை விற்பது தெரிந்தால் நாங்கள் பறிமுதல் செய்து அபராதம் மட்டுமே விதிக்க முடியும். சட்டங்கள் கடுமையானால் மட்டுமே இவற்றை முழுமையாக தடுக்க முடியும்" என்றனர்.