மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு முழுவதுமாக ஆன்-லைன் விண்ணப்பத்தினை சென்டாக் நிர்வாகம் இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான முதல் நாளான நேற்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்டினர். குறிப்பாக மாணவர் சேர்க்கை பற்றிய தகவல் புத்தகத்தை www.centaconline.in என்ற இணையதள முகவரியில் டவுன்லோடு செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். 31ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
ஒரு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 250 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 750 ரூபாய், (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 375 ரூபாய்) மூன்று படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 1000 ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 500 ரூபாய்) விண்ணப்ப கட்டணமாக டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதிக்குள் சென்டாக் அலுவலகத்திற்கு தபாலில் அல்லது கூரியரில் இணைத்து அனுப்ப வேண்டும். ஜூன் 10ம் தேதி வரை தான் விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...