"பழங்குடியின மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் சாதிக்க இயலும்"

"பழங்குடியின மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் சாதிக்க இயலும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாம் கூடலூரில் நடந்தது. திட்ட மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் டாக்டர் வடிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், "தற்போது பள்ளி செல்லும் மாணவர்களை விட அவர்களின் பெற்றோர்கள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவ சமுதாயத்தில், அவர்களின் தங்களின் திறமைகளை வெளி கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உயர் கொள்கைகளையும், சிறந்த லட்சியங்களையும் கொண்டிருந்தால் திறமையுள்ள இளைய சமுதாயத்தை உருவாக்க இயலும்" என்றார்.
ஆதிவாசி சங்க சட்ட ஆலோசகர் மதிவாணன் பேசுகையில், "நகரங்களில் மட்டுமே நடைபெறும் இதுபோன்ற முகாம்கள், கிராமப்புற பழங்குடியின மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் நடத்துவதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டியான உலகில் அதிக மதிப்பெண்களை பெறுவதால் நல்ல பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க இயலும்.
சட்டம் படிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்து தொடர்வதால் 27வகையான வேலைவாய்ப்புளை பெற இயலும். தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் நல்ல எதிர்காலம் கிடைக்கும். 10 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்கு தேவைப்படும் நிலையில், தற்போது 7.15 லட்ச பணியிடம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சிக்கு, சங்க செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். கூடலூர் நகர மன்ற தலைவர் ரமா பேசினார். தொழிநுட்பம் குறித்து ஸ்ரீதர், கபிரியேல், இன்ஜினியரிங் குறித்து முகுந்தன், குணா, ஐ.டி.ஐ. குறித்து சுந்தர், தொலைதூர கல்வி குறித்து ஆனந்த் உள்ளிட்ட பலர் பல பாடபிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். முதுநிலை திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...