கல்விக்கடன் வேண்டுமா? அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்

"வங்கிகளில் கல்விக் கடன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஏ.ஐ.சி.டி.இ. அல்லது
யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்வுசெய்ய வேண்டும்; மாறாக, அங்கீகாரமற்ற பாடங்களில் சேர்ந்து பொருளாதார பிரச்னைகளுக்கு ஆளாகவேண்டாம்" என, வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் கடந்த 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரிகளை நாடிவருகின்றனர். தற்போது, அரசு கலைக் கல்லூரிகள், இன்ஜி., கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் அமோகமாக நடந்துவருகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களிலும், மவுசு அதிகமுள்ள பாடங்களையும் தேர்வு செய்துவருகின்றனர்.
வசதி படைத்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் இடம்பிடிக்கின்றனர். ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் நலத்திட்டங்களையே நம்பியுள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. எனவே, தனியார் கல்லூரிகளில் படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே சமயம் பொருளாதார பிரச்னையிலிருந்து மீளுவதற்கு வங்கிக் கல்வி கடன்களை பெறுகின்றனர்.
கல்விக் கடனை எதிர்பார்க்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், போதிய விழிப்புணர்வு இல்லாமல் அங்கீகாரமற்ற பாடங்களை தேர்வுசெய்கின்றனர். இதனால், வங்கிகளில் கல்விக்கடன் கிடைக்காது ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், கல்லூரி படிப்பை தொடர முடியாத அவலநிலையும் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், பெற்றோரின் ஆசையும் நிராசையாகிறது. எனவே, பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்வு செய்ய வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வங்கிகளில் கல்விக் கடன் பெறவிரும்பும் மாணவர்கள், ஏ.ஐ.சி.டி.இ. அல்லது யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெறும் மாணவர்கள் கவுன்சிலிங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்; இன்ஜி. பாடங்களுக்கு கவுன்சிலிங் கட்டாயம்.
இந்தியாவில் படிக்க 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாடுகளில் படிக்க 30 லட்சம் ரூபாய் வரையும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் சென்று பயில விரும்புபவர்கள், பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ளதா என பட்டியலை சோதிக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் வரை பெறுபவர்களுக்கு எவ்வித உத்திரவாதமும் தேவையில்லை; அதற்குமேல் பெறுபவர்களுக்கு உத்திரவாதம் தேவை.
கடன் தொகையை பொறுத்து, வட்டி விகிதம் மாறுபடும். கல்விக் கடனை குறிப்பிட்ட தவணைக்கு முன்னதாக திருப்பி செலுத்தினால், எந்தவொரு அபராத தொகையும் வசூலிக்கப்படாது. எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் அங்கீகாரமற்ற படிப்புகளில் சேர்ந்து பிரச்னைகளுக்கு உள்ளாக வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
விழிப்பில்லை
சில வங்கிகளில் கல்விக்கடன் தர மறுப்பதாக புகார் எழுகிறது; இதற்கு, அங்கீகாரமற்ற பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வுசெய்யும் விழிப்பின்மையே காரணம். எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் கல்வியாளர்களின் ஆலோசனையை பெற்று பாடங்களை தேர்வுசெய்யலாம். உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளை நாடுபவர்களுக்கும் கடன் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையில் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...