"வாழ்க்கையில் உயர பணிவு தேவை"

ஜெயந்தி ரவி பேசியதாவது: பெண்கள், வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் சிறப்பாக பணிபுரிகின்றனர்.
ஒவ்வொருவரின் வெற்றியையும் எண்ணங்கள் தான் நிர்ணயிக்கின்றன. எனவே, அனைவரும் நல்ல எண்ணங்களை உடையவராக இருக்க வேண்டும். ஒரு பெண், குழந்தை, மகள், மருமகள், தாய், பாட்டி என எல்லா நிலைகளிலும் உள்ள பல பொறுப்புகளை சிறப்பாக கவனிக்கிறார். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல பணிவு மிகவும் அவசியம். வரலாற்றில் பல பெண்கள் நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். பெண்களிடம் தன்னம்பிக்கை இருந்தால் தடைகளை தகர்த்து எறிந்து வளர்ச்சி பாதையில் செல்ல முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
எச்.டி.எப்.சி., வங்கி அதிகாரி ராம் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பம், வங்கி போன்ற துறைகளில் பெண்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர். எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புள்ள மின்சாரம், எண்ணெய், உருக்கு போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்த துறைகளிலும் பெண்கள் சாதிக்கும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...