பொறியியல் கல்லூரிகளை நேரில் அறிந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்

"இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சியில் பங்கேற்போர், சிறந்த கல்லூரிகளை முன்னதாகவே கண்டறிந்து
வரவேண்டும்" என, சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.
மதுரையில் தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் கல்லூரியை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் பி.ஸ்ரீராம் பேசுகையில், "இன்ஜினியரிங் முடித்து வேலைதேடும் மாணவர்களுக்கு 10, பிளஸ் 2, இன்ஜினியரிங்கில் அதிக மதிப்பெண்கள், தொடர்பு திறன், ஆய்வுக்கூட பயிற்சித் திறன் பெற்றிருப்பது அவசியம்" என்றார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சின்னதுரை அப்துல்லா பேசுகையில், "பெற்றோர் மாணவர்களை இந்த பிரிவில் சேர்ந்து படி என வற்புறுத்தக் கூடாது. மாணவர்கள், பாடத்திட்டத்துடன், பிற திறன்களையும் வளர்க்க வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: மாணவர்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடத்தை படிப்பது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் விரும்புவதை தரும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். பின் பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கல்லூரிகளை நேரில் அறிந்து பின் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவேண்டும். 2 மணி நேரம் முன்னதாகவே கவுன்சிலிங்கிற்கு வரவேண்டும். அங்கு முன்பின் தெரியாதவர்கள், உதவுவது போல பேசினால் ஏமாந்துவிடக் கூடாது.
பல கல்லூரிகள் ஒரே மாதிரியான பெயரை கொண்டுள்ளன. இவற்றின் விபரங்களை கோர்ட் உத்தரவுப்படி, இன்னும் 10 நாட்களில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்கால வாய்ப்பு
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி பேசியதாவது: இன்ஜினியரிங் படிப்பை, விருப்பமானது என்பதை வைத்து தேர்வு செய்யாதீர்கள். விருப்பம் மாறிக் கொண்டே இருக்கும். எனவே எதிர்கால வாய்ப்பை, விருப்பமாக்கி தேர்வு செய்யுங்கள். எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு சிவில் பிரிவுக்கு உள்ளது. அடுத்து எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு உள்ளது. பின், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கு வாய்ப்புள்ளது. அதேபோல மெக்கானிக்கல் பிரிவில் மாணவிகளுக்கு நல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் குறுகிய வாய்ப்புள்ள படிப்புகளை தேர்வு செய்ய கூடாது. இன்ஜினியரிங்கில் இளநிலை படிப்புக்கே நல்ல வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் இணைந்து, ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, தானிஷ் அகமது இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின. மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. சிறந்த கேள்வி எழுப்பிய மாணவர்களுக்கு பென்டிரைவ் பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்களில் ஒருவருக்கு ஐபேட், 5 பேருக்கு மொபைல்போன், 30 பேருக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான ஸ்காலர்ஷிப், ஆயிரம் பேருக்கு ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...