மரம் நட மறக்காதீங்க


நிழலோட அருமை வெயிலில் தெரியும் என்பது இந்த அக்னி வெயிலில் உங்களுக்குப் புரிந்திருக்குமே...நிழல் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் உணவு, இருப்பிடம், மருந்து என அனைத்திற்கும் அடிப்படை மரங்கள் தான். வாகனங்களினால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசையும் கட்டுப்படுத்தப் பயன்படுவதும் மரஞ்செடிகள் தான். மரங்கள் தான் நம் உயிர் வாழ்வின் சுவாசக்காற்றின் அடிப்படை என்று தெரிந்தும் அதை வளர்ப்பதில் பலர் ஈடுபாடு காட்டுவதே இல்லை. இதுகுறித்து ட்ரீ பேங்க் நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், இதுவரை நாள் தோறும் மரம் நடுதல் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பள்ளி, காலேஜ், மைதானம், பூங்கா, சுடுகாடு என பல இடங்களில் அரசின் அனுமதியுடன் 89 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம், மரஞ்செடிகளை வளர்க்க விருப்பம் இருந்தும் வீடுகளில் வளர்க்க முடியாத சூழ்நிலை இருப்பவர்கள் வீடுகளில் பால் பாக்கெட், எண்ணெய் பாக்கெட் போன்ற கவர்பைகளில் மண் போட்டு விதையூன்றி அவை கொஞ்சம் வளர்ந்தவுடன் அந்த மரஞ்செடி கன்றுகளை எங்களிடம் கொடுக்கலாம். வீட்டில் தொட்டிகளில் வளர்த்து வரும் செடிகளை வளர்க்க முடியவில்லையென்றாலும் வீணடிக்காமல் எங்களிடம் தரலாம். பள்ளிக்குழந்தைகளிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை இளவயதிலே ஏற்படுத்தி வருகிறோம். மரங்களின் அவசியத்தை உணர்ந்தால் மட்டும் போதாது. மரம் நடுதலின் அவசியத்தையும் உணரவேண்டும், என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...