தடைகளைத் தாண்டி சாதித்தார் அரசுப் பள்ளி மாணவி பாகிரா பானு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி பாகிரா பானு, பல்வேறு
தடைகளை தாண்டி, முதலிடம் பெற்ற மாணவர்களுள் ஒருவராக வந்துள்ளார். அவரும் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
அந்த மாணவி, திருநெல்வேலி அருகே, பத்தமடை என்ற ஊரிலுள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்.
தனியார் பள்ளிகள், குறிப்பாக தனியார் சுயநிதிப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு பாடத்தை 9ம் வகுப்பிலேயே நடத்தி, 9ம் வகுப்பு பாடத்தையே நடத்தாமல் போவதும், 12ம் வகுப்பு பாடத்தை 11ம் வகுப்பிலேயே நடத்தி, 11ம் வகுப்பு பாடத்தையே நடத்தாமல் போவதும் வழக்கமாக நடப்பதுதான்.
மேலும், அதுபோன்ற பள்ளிகளில், நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தேர்வுசெய்து, சீனாவில், மாணவர்களுக்கு, ஒலிம்பிக் பயிற்சிகள் கொடுப்பதுபோல், அவர்களுக்கு மிகமிக கடுமையான முறையில், நேரம் காலம் பார்க்காமல் மனப்பாட பயிற்சிகளை கொடுத்து, மாநில ரேங்க் பெற வைக்கிறார்கள்.
ஆனால், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை பல தடைகள் உண்டு. ஆசிரியர் பற்றாக்குறை, அந்தந்த வகுப்பு பாடங்களையே அந்தந்த ஆண்டில் ஒழுங்காக நடத்தாதது, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததது, தொடர்ச்சியான பயிற்சிகள் இல்லாதது, தேவையான ஊக்குவிப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உண்டு.
எனவே, இத்தனை சிக்கல்களையும் தாண்டி, ஒரு அரசுப் பள்ளி மாணவி, 499 மதிப்பெண்கள் பெற்று, மாநில முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டதை நாமெல்லாம் பராட்டியே ஆக வேண்டுமல்லவா!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...