பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேட் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை
அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் லேமினேட் செய்வதாக தெரிய வருகிறது. லேமினேட் செய்யும்போது சான்றிதழ்கள் சேதமடைகின்றன.
மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும்போது லேமினேட் செய்திருந்தால் திருத்தம் செய்வது சிரமம். வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்க சான்றிதழ்களை வெளியே எடுக்கும்போது அவை சிதைவடைகின்றன. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் லேமினேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது