"பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற
விளையாட்டும் முக்கிய பங்கு வகித்தது" என மாநில
அளவில் 2ம் இடம் பெற்ற உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாலினி தெரிவித்தார்.
இம்மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். இவர் தமிழ் பாடத்தில் 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100, மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மாணவி மாலினி கூறியதாவது: வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்ததே பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்றதற்கு முக்கிய காரணம். விளையாட்டிலும் ஈடுபாட்டுடன் இருந்து, மாநில மற்றும் மாவட்ட அளவிலும் சாதித்துள்ளேன். குறிப்பிட்ட நேரம் விளையாட்டுக்கும் ஒதுக்கியது, மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் அதிக மதிப்பெண் பெற பயனுள்ளதாக இருந்தது. வேளாண்மை படிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.