சீன உயர் கல்வி நிறுவனங்களால் தொடர்ந்து சாதிக்க
முடிவது எப்படி என்பது குறித்து இந்திய அதிகாரிகள் குழு
முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை விரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அந்த உயர் மட்டக் குழு சமர்ப்பிக்க உள்ளது.
அண்மையில் உலக அளவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஹாங்காங் நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த நிலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இப்போது மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த சில உயர் கல்வி நிறுவனங்கள் எப்படி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான திட்டத்தை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (எஃப்.ஐ.சி.சி.ஐ.) ஏற்பாடு செய்தது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் மத்திய உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் அமித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த மாதம் சீனா சென்று, தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டு இப்போது இந்தியா திரும்பியுள்ளது. இது குறித்து அந்த உயர் நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியது:
மத்திய உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் தலைமையில் சென்ற இந்தக் குழுவில் போபால், ஹரியாணா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தோம்.
சீன உயர் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த சீனாவைச் சேர்ந்த பெக்கிங் பல்கலைக்கழகம், சிங்குவா பல்கலைக்கழகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வகங்கள், பாடத் திட்டம், கற்பித்தல் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ததோடு, பேராசிரியர்களோடும் கலந்துரையாடினோம்.
இந்த ஆய்வுகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் இங்குள்ள உயர் கல்வித் திட்டங்களில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, உயர் கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.