ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2014 மே மாதம் பணி ஓய்வு பெறுவோர் மூலம் ஏற்படும் காலியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 1080 முதுகலை ஆசிரியர் 280 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட பதவி உயர்வு பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இப்பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு மறுஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், "கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் போது அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். இம்மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பிய பட்டியலில் ஏதாவது விடுபட்டுள்ளதா? என மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துவது தாமதத்தை ஏற்படுத்தும்" என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...