தமிழக சட்டப்பேரவை ஜூலை 10-ம் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக பேரவைச்
செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்ட செய்திக்
குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ் பேரவைத்
தலைவர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஜூலை 10 ஆம்
தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப்பேரவை எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது, ஜூலை 10-ல் தெரியவரும்.
மக்களவைத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு, நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது என்பது கவனிக்கத்தக்கது